துப்பாகிச்சூட்டு சம்பவத்தில் முன்னாள் உறுப்பினர் பலி!

சற்றுமுன் மீகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சுட்டு சம்பவத்தில் ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுங்கொடுவ உயிரிழந்தார்.

இவர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்த வேளையிலேயே குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துனர்.

அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் இவர் தாக்குதலுக்கு இலக்கானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.