முட்டை பாஸ்தா செய்யலாம் வாங்க!

இரவு உணவிற்கு குழந்தைகளுக்கு பிடித்தமான முட்டை பாஸ்தா எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

பொதுவாக இன்றைய குழந்தைகள் அதிகமாக விரும்பி சாப்பிடும் உணவில் ஒன்று தான் பாஸ்தா ஆகும். பாஸ்தாவை சற்று வித்தியாசமாகவும், விதவிதமாகவும் சமைத்து சாப்பிடுகின்றனர்.

இங்கு முட்டை பாஸ்தா எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
முட்டை – 4
எண்ணெய் – தேவையான அளவு
சீரகம் – அரை ஸ்பூன்
பூண்டு – 2 பல்
வெங்காயம் – 2
தக்காளி – 1
கரம் மசாலா – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
மல்லித் தூள் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவைக்கு ஏற்ப
மிளகுத்தூள் – அரை ஸ்பூன்
பாஸ்தா – 100 கிராம்
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை
வெங்காயம், பூண்டு இவற்றினை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதித்ததும், அதில் பாஸ்தாவை சேர்க்கவும்.

10 நிமிடம் வேக வைத்த பின்பு தண்ணீரை வடிகட்டி பாஸ்தாவை தனியாக வைக்கவும். பின்பு வாணலி ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய், சீரகம், பொடியாக நறுக்கிய பூண்டு இவற்றினை சேர்த்து வதக்கவும்.

பின்பு தக்காளி, கரம் மசாலா, மிளகு மற்றும் மல்லி மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவுமு். தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

குறித்த மசாலாவை வாணலியில் ஓரத்தில் வைத்துவிட்டு, பின்பு எண்ணெய் சேர்த்து அதில் முட்டைகளை ஊடைத்துப்போட்டு நன்று பொடியாக பொரிக்கவும்.

பின்பு மசாலாவை இதனுடன் சேர்த்து நன்கு கலந்த பின்பு வேக வைத்துள்ள பாஸ்தா சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் கிளறி, இறுதியாக மிளகுத்தூள், கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான முட்டை பாஸ்தா தயார்.