பிரமாண்டமாக நடந்த திருமணம் கடைசியில் விவாகரத்தில் முடிந்தது தொடர்பில் விஜே ரம்யா விளக்கம் கொடுத்துள்ளார்.
தொகுப்பாளினி ரம்யா
பிரபல தொகுப்பாளராக சின்னத்திரையில் வலம் வருபவர் தான் ரம்யா சுப்ரமணியன்.
அவர் தற்போது நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வந்தாலும் வெள்ளத்திரையில் உச்ச நட்சத்திரங்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
அவ்வப்போது விருது விழாக்கள், பட விழாக்கள் போன்றவற்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். அத்துடன் ரம்யா பிட்னெஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்பதால் ஆன்லைன் வழியாக பயிற்சிகளை பயனர்களுக்கு கொடுத்து வருகிறார்.
இதற்கிடையில் ரம்யா கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த வாழ்க்கை நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை. தம்பதிகளுக்குள்ளே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.
அதன் பின்னர் விஜே ரம்யா பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா, கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கொடுத்த பேட்டி காணொளியொன்று வைரலாக்கப்பட்டு வருகிறது.
அதில், “பிரமாண்டமாக நடந்த என்னுடைய திருமணம் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது என்றால் அது சாதாரணம் இல்லை. அவர்களின் வாழ்க்கையில் முடிவுக்கு உரிமை அவரவர்களுக்கு உள்ளது. அதே போன்று தான் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விடயங்களும்.
உதாரணமாக ஒருவர் வேலை பிடிக்கவில்லை என்றால் அந்த வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருந்தால் வீட்டிலுள்ளவர்கள் கேள்விக் கொண்டே இருப்பார்கள். ஆகையால் கேள்வி கேட்பது இயற்கை…” என்பது போன்று பேசியிருக்கிறார்.
இந்த காணொளியை பார்த்த இணையவாசிகள், ரம்யாவுக்கு ஆதரவான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.







