கணவரை பிரிகின்றாரா சங்கீதா?

நடிகை சங்கீதா மற்றும் பாடகர் கிரிஷ் தம்பதிகள் விவாகரத்து செய்யப்போவதாக தகவல் வெளியாகி இணையத்தில் தற்போது வைராலாகி வருகின்றது.

நடிகை சங்கீதா- கிரிஷ்
தமிழ் சினிமாவில் ‘காதலே நிம்மதி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை சங்கீதா.அதனையடுத்து இவர் நடிப்பில் வெளியான சில படங்கள் தோல்வியடைந்தால் ராசியற்ற நடிகையென்று ஒதுக்கப்படார்.

ஆனால் 2003 ஆம் ஆண்டு வெளியான பிதாமகன் படத்தில் விக்ரம் ஜோடியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.இந்த திரைப்படம் சூப்பர் ஹிட்டதனது.

அதன்பின் உயிர், தனம் போன்ற படங்களில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்தார். தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி குணச்சித்திர நடிகையாக வலம் வருகிறார்.

சங்கீதா, மலையாள படங்களில் பிசியாக இருந்த சமயம் அது. ஒரு விருது விழாவில், பிரபல பின்னணி பாடகர் கிரிஷை சந்தித்தார்.

சில மாதங்கள் டேட்டிங் செய்த இவர்கள் பின்பு 2009ஆம் ஆண்டு திருவண்ணாமலை கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இப்போது அவர்களுக்கு ஒரு பெண் பிள்ளையும் இருக்கிறார்.

இவர் இறுதியாக தமிழில் விஜய் நடித்த வாரிசு படத்தில் அவருக்கு அண்ணியாக நடித்திருந்தார். தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் பிசியாக வலம் வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயரை சங்கீதா கிரிஷ் என்பதிலிருந்து சங்கீதா ஆக்டர் என அவர் மாற்றி இருக்கின்றார்.

இதனால் தனது கணவர் கிரிஷை சங்கீதா விவாகரத்து செய்யப்போவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றது.

அதுமட்டுமன்றி அண்மை காலமாக தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படங்களை மட்டுமே சங்கீதா ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றார்.

சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற 90ஸ் நடிகைகளின் ரீயூனியன் கொண்டாட்டத்திலும் சங்கீதா தனியாக கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் சங்கீதா மற்றும் கிரிஷ் விவாகரத்து செய்யப்போவதாக பேசப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sangitha Santharam (@sangitha.act)