சர்ச்சைக்கு நடுவே உசாரான மாதம்பட்டி ரங்கராஜ்

சமூக வலைத்தளங்களில் மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்திருப்பது பெரும் சர்ச்சையாக கிளம்பிய வேளையில், அவர் செய்த மற்றுமொரு செயல் இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ்

பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் ஃபேமஸ் சமையல் கலைஞராக வலம் வரும் இவர், பலருக்கு சமைத்து போட்டுக் கொண்டிருக்கிறார்.

சினிமா பிரபலங்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் சமையல் கலையில் அசத்துபவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். அந்த அளவுக்கு அவர்களுக்கு பரிச்சயமானவராக இருக்கிறார்.

இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். குக்கூ படத்தின் இயக்குநரான ராஜுமுருகனின் சகோதரர் இயக்கியிருந்த இந்த படம் வணிக ரீதியாக வரவேற்பை பெறவில்லை.

இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வராத நிலையில், இன்றைய தினம் ஒரு பதிவொன்று வைரலாக்கப்பட்டு வருகிறது.

வழக்கமாக மாதம்பட்டி ரங்கராஜ் போடும் பதிவுகளுக்கு கமெண்ட் செக்ஷனை திறந்து வைத்திருப்பார். ஆனால் இந்த பிரச்சனைக்கு பிறகு, தனது போஸ்ட்களில் மட்டுமல்லாமல் ஸ்டோரியிலும் கமெண்ட் மற்றும் ரிப்ளை காெடுப்பதை ஆஃப் செய்திருக்கிறார்.

ஜாய் கிரிஸில்டாவுடன் மாலை கழுத்துமாக இருக்கும் படங்களில் தாடி மீசையுடன் இருக்கிறார். அதே கெட்டப்பில் தான் சில நாட்கள் வரை இருந்தார். சமீபத்திய எபிசோடில் க்ளீன் ஷேவ் செய்து மீசை மட்டும் வைத்துள்ளார்.

சர்ச்சைக்கு நடுவிலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது எங்கோ வெளியூர் போயிருக்கிறார். அந்த புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார்.

இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் ஜாய் கிரிஸில்டா, சமீபத்தில் தனது வயிற்றின் புகைப்படத்தை பகிர்ந்து,“ என்னுடைய நம்பர் ஹேக் செய்யப்பட்டு விட்டது. யாரும் அந்த நம்பரில் இருந்து அழைப்பு வந்தால் எடுக்க வேண்டாம்” எனக் குறிப்பிட்டு பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.