சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா நடனப் பள்ளியால் பெரிய பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது.
அவரது நடனப்பள்ளியில் ஒரு காதல் ஜோடி தவறு செய்துவிட இதனால் அந்த பெண் கர்ப்பமாக விடுகிறார். இந்த விஷயம் தெரிந்த தீபன்-ரதி வீட்டார் அண்ணாமலை வீட்டிற்கு வ்ந்து விஜயாவை மிரட்ட முத்து-மீனா துணையாக இருந்து பிரச்சனையை முடிக்கிறார்கள்.
ஆனால் இடையில் மனோஜ் நான் போய் பேசுகிறேன் என தீபன்-ரதி வீட்டாருக்கு பண ஆசையை காட்ட அவர்கள் ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். விஜயா இந்த பணத்தை நீ நான் கொடுக்க வேண்டும் என ரோஹினியிடம் கூற அவர் சிட்டியிடம் சென்று உதவி கேட்க அது பெரிய பிரச்சனையாகிவிட்டது.
ரோஹினி போலீசாரால் கைது செய்யப்பட முத்து மீனாவாலேயே வீட்டிற்கும் வருகிறார்.
நாளைய எபிசோட் புரொமோவில், விஜயா மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கி கொடுக்கிறார். அவரை செல்லம் என கொஞ்ச செய்கிறார். விஜயாவின் நடவடிக்கையை பார்த்து முத்து-மீனா இல்லை குடும்பத்தினரே ஷாக் ஆகியுள்ளனர்.







