எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியை குணசேகரன் சரமாரியாக தாக்கியுள்ள நிலையில், தற்போது உயிருக்கு போராடும் காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த குணசேகரன் மீண்டும் தவறுக்கு மேல் தவறு செய்து வருகின்றார்.
பார்கவியை தர்ஷனுக்கு திருமணம் செய்ய ஈஸ்வரி முயற்சித்து வரும் நிலையில், தர்ஷனுக்கும் அன்புக்கரசிக்கும் திருமணம் ஏற்பாட்டை குணசேகரன் தீவிரமாக செய்து வருகின்றார்.
ஜீவானந்தம் பார்கவியை அழைத்து சென்று அவரை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கு அனைத்து உதவியையும் செய்து வருகின்றார்.
இந்நிலையில் தர்ஷனுக்காக ஈஸ்வரி குணசேகரனிடம் பேச சென்றுள்ளார். அப்பொழுது குணசேகரன் ஈஸ்வரியை தாக்கியதில் அவர் உயிருக்கு போராடுகின்றார்.
மற்றொரு புறம் பார்கவியை நேரில் சந்தித்த ஜனனி அவரிடம் பேச முயற்சிக்கின்றார். அப்பொழுது அவர் வெளிநாடு செல்வதில் உறுதியாக இருக்கின்றார்.







