ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய எதிர்கால வாழ்க்கையில் பிறப்பு ராசியானது முக்கிய பங்கு வகிக்கின்றது. குறிப்பாக இவர்களின் நிதி நிலை, செல்வாக்கு என்பவற்றை ராசியே தீர்மானிப்பதாக நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கை முழுவதும் ராஜ வாழ்க்கை வாழும் யோகம் கொண்டவர்களாகவும் இந்து மத நம்பிக்கையின் பிரகாரம் சொர்க்கத்திலும் ராஜ வாழ்க்கையை அனுபவிக்கும் அதிர்ஷ்டம் பெற்றவர்களாக இருப்பார்கள்.
அப்படி வாழும் காலமெல்லாம் சகல செல்வ செழிப்புடன் செகுசு வாழ்க்கை வாழும் ராசியினர் யார் யார் என் இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரனால் ஆளப்படுவதால், இவர்களின் வாழ்க்கையில் பணத்துக்கு பஞ்சமே இருக்காது.
இவர்கள் கடின உழைப்பு மற்றும் நேர்மைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் இயல்பாகவே சொகுசு வாழ்க்கை மீது தீராத மோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
சுக்கிரனின் செல்வாக்கினால், வாழ்க்கையில் செல்வம், சொத்து, வீடு, வாகனம் என அனைத்தும் பெற்று மற்றவர்கள் வியந்து பார்க்கும் அளவுக்கு ஒரு ராஜ வாழ்க்கையை வாழ்வார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியினர் பிறப்பிலேயே தலைமைத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். சூரியனினால் ஆளப்படும் இவர்கள் இருக்கும் இடம் ஒளிமயமாக இருக்கும்.
இவர்கள் வாழ்நாள் முழுவதும் சகல செல்வ செழிப்பும் பெற்று, சொகுசாக வாழும் யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
சமூகத்தில் அவர்களுக்கு ஒரு சிறப்பு அடையாளம் எப்போதும் இருக்கும்.இவர்கள் வாழ்வில் ஒருபோதும் நிதி ரீதியில் பிரச்சினைகளை எதிர்கொள்வதே கிடையாது.
துலாம்
துலா ராசியில் பிறந்தவர்கள் இயல்பிலேயே சமநிலையைப் பேணுவதிலும் உறவுகளில் நல்லிணக்கத்தைப் பேணுவதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.
இவர்களும் சுக்கிரனால் ஆளப்படுவதால், ரிஷப ராசியினரை போன்றே இவர்களும் வாழ்வில் ஒருபோதும் பணத்துக்கு போராடும் நிலை ஏற்படாது.
இவர்கள் அதிர்ஷ்டத்தை விரும்பாது, கடின உழைப்பாளிகளாக இருக்கின்ற போதிலும் இவர்களின் அதிஷ்டம் இவர்களை எப்போதும் நிதி ரீதியாக உச்சத்தில் வைத்திருக்கும்.
இவர்கள் எா்போதும் நியாயமான முறையில் நடந்து கொள்வதன் விளைவாக இவர்களின் ஆன்மா மரணத்திற்குப் பிறகும் சொர்க்கத்தில் ராஜ வாழ்க்கை வாழுமாம்.







