நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தாண்டு நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்தைக் கடந்துள்ளது.

அதன்படி, ஜனவரி 1 முதல் ஜூலை 27 வரையான காலப்பகுதியில் 1,341,953 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ளதோடு, அதன் எண்ணிக்கை 274,919 ஆகும்.

இதற்கு மேலதிகமாக பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி, சீனா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்து அதிகார சபை வழங்கிய தகவல்களுக்கு அமைவாக, ஜூலை மாதத்தில் 27 நாட்களில் 173,909 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.

மேலும், ஜூலை மாதத்தின் 27 நாட்களில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளதோடு, ஜூலை 26 ஆம் திகதியில் மாத்திரம் 7,579 பேர் வருகை தந்துள்ளனர்.