இரண்டு யானை தந்தங்களுடன் நான்கு சந்தேக நபர்களை கல்கமுவ வனவிலங்கு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கல்கமுவ, நிகினியாவ மற்றும் ஒலோம்பேவ பகுதிகளில் இன்று (24) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளர்.
வடமேற்கு வனவிலங்கு பிரிவு உதவி பணிப்பாளரின் வழிகாட்டுதலின் கீழ், முன்னதாக கிடைத்த தகவலின் பேரில் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சந்தேக நபர்கள் கெகிராவ நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு ஓகஸ்ட் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், யானை கொல்லப்பட்ட இடத்தையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வன விலங்கு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.







