காலையில் பல் துலக்கினால் தீமையாம்!

காலை எழுந்தவுடன் உடனடியாக பல் துலக்குவது சில நேரங்களில் பல் உதிர்வு, ஈறு பாதிப்பு போன்ற தீமைகள் ஏற்படுத்தலாம். இதற்கு எப்போது துலக்கவேண்டும், என நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

காலை பல் துலக்குதலின் தீமைகள்
நாம் பெரும்பாலானோர் பற்களை காலை எழுந்தவுடனே துலக்குகிறோம். இது சுத்தமாக இருக்கும் நன்னெறி போலத் தோன்றினாலும், சில நேரங்களில் இதனால் பல் மற்றும் வாயின் ஆரோக்கியத்தில் கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பல் மேல்சரத்தை (enamel) பழுதாக்கும் வாய்ப்பு நம் பல் மேலே ஒரு பாதுகாப்பான பகுதி இருக்கிறது. அதுதான் enamel. காலை எழுந்தவுடன் வாயில் bacteria அதிகமாக இருக்கும்.

அதே நேரத்தில், பல் மேலே acid சற்று அதிகம் இருக்கும் (உணவின் காரணமாகவோ, saliva குறைவாகவோ). இதே நேரத்தில் பல் துலக்கினால், அந்த acid பல் மேல்சரத்தை மெலிதாக்கி, பல் உடையும், பலம் குறையும்.

ஈறுகளில் பாதிப்பு ஏற்படும் அதிக கசப்பாகப் பல் துலக்கினால், gum (ஈறு) பின்வாங்கும். இதன் காரணமாக பல் வேகமாக உதிரும் அல்லது சிலிர்க்கும்.

வாயில் இயல்பான சுரப்பிகள் (saliva) வேலை செய்ய இடமளிக்காது தூங்கும்போது, வாயில் தண்ணீர் (saliva) குறைவாக இருக்கும். ஆனால், அந்த saliva பற்களுக்கு பாதுகாப்பு தரும். பல் துலக்க ஆரம்பிக்காமல் 10–20 நிமிடங்கள் கொடுத்தால், saliva பல் மேலே ஒரு பாதுகாப்பு படலம் உருவாக்கும்.

வாய்வாசனை மறைக்கப்படும், தீராத குறை இல்லை சிலர் உணவுக்கு பிறகு துலக்காமல், எழுந்தவுடனே துலக்கி விட்டுப் போய்விடுவார்கள். அது mouth-ல எஞ்சும் உணவுகள் bacteria-வாக மாறி வாய்வாசனையை உண்டாக்கும்.

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்
பற்களை எப்போதும் காலையில் வலுவாக அழுத்தி துலக்கக்கூடாது அது பல் மேல்சரத்தை சேதப்படுத்தும். Soft bristled tooth brush (மென்மையான தூரிகை) பயன்படுத்த வேண்டும்.

பல் துலக்கும் பொழுது மெதுவாக வட்டமாகத் துலக்க வேண்டும். காரணம் தூங்கியவுடன் வாயில் உள்ள bacteria மற்றும் வாசனையை அகற்ற இது உதவும். உணவுக்குப் பிறகு பல் துலக்கலாமா ஆம், துலக்கலாம் ஆனால் உணவுக்குப் பிறகு உடனே அல்ல.
30 நிமிடங்களுக்கு பிறகு துலக்க வேண்டும். ஏனெனில் உணவின் அமிலம் பல் மேல்சரத்தை மெலிதாக்கும். உடனே துலக்கினால் பல் உரிந்து போகும் அபாயம் உள்ளது. இந்த இடைவெளியில் வாயை தண்ணீரால் கழுவுவது நல்லது.