கை மற்றும் தொடைகளில் தேங்கிய கொழுப்பை போக்க

பொதுவாக இப்போது எல்லோரது பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது உடல் எடை அதிகரிப்பு கெட்ட கொழுப்பின் அதிகரிப்பும் தான். இதற்க பல மருத்துவங்கள் செய்வதை விட நாம் வீட்டிலேயே சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு பொருள் உள்ளது.

பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில் சிறப்பிடம் பெற்றுள்ள வெந்தயம், உணவின் சுவையை மட்டும் உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் தன்மை கொண்டது.

வெந்தய விதைகள் மற்றும் அதில் ஊறவைத்த தண்ணீரை தினமும் பயன்படுத்துவதால், பலவிதமான உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வுகிடைக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதை விரிவாக பார்க்கலாம்.

வெந்தய விதை தண்ணீர் நன்மைகள்
வெந்தய விதைகளில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெந்தய நீரை குடித்தால், சில நாட்களிலேயே சுறுசுறுப்பும் ஆரோக்கியமாகவும் உணரலாம்.

வெந்தய நீரின் மருத்துவ நன்மைகள்
நீரிழிவை கட்டுப்படுத்தும்
இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்கும்
உடல் கொழுப்பை குறைக்கும்
செரிமானத்தை மேம்படுத்தும்
சருமம் பளபளப்பாக இருக்கும்

ஒரு டீஸ்பூன் வெந்தய விதைகளை, ஒரு டம்ளர் தண்ணீரில் இரவெல்லாம் ஊறவைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கலாம். அந்த விதைகளையும் அப்படியே மென்று சாப்பிடலாம்.

வெந்தய விதை நீர் ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தும். இன்சுலின் உணர்திறனை (insulin sensitivity) அதிகரித்து, நீரிழிவு நோயாளிகளுக்கு நிவாரணம் அளிக்கும்.

உடல் பருமனை கட்டுப்படுத்தும். கெட்ட கொழுப்பு சத்து (bad cholesterol – LDL) குறைந்து, நல்ல கொழுப்பு சத்து (HDL) அதிகரிக்கும்.

செரிமானத்தை தூண்டி, மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைக்கு தீர்வாகும். பசியை தூண்டும்.

டாக்ஸின் நீக்கம் மூலம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். முகத்தில் பளபளப்பும், தழைப்பும் உண்டாகும்.

முடி உதிர்வை கட்டுப்படுத்தும். முடி வேர்களுக்கு ஊட்டம் அளித்து வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

வெந்தயத்தின் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஆன்டி-இன்ஃப்ளமடரி பண்புகள் வீக்கம் மற்றும் வலிகளை குறைக்கும்.

பெண்களின் ஹார்மோன் சமநிலையை மேம்படுத்தி, மாதவிடாய் ஒழுங்கின்மை மற்றும் வலி குறைக்கிறது.