திருடர்களை மடக்கி பிடித்த மக்கள்!

திருகோணமலை மாவட்டத்தில் பதவிசிறிபுர பிரதேசத்தில் அதிகளவான மாடு திருட்டில் ஈடுப்பட்ட மூவர் பிரதேசமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கபப்ட்டுள்ளனர்.

நேற்று இரவு வேளையில் திருடர்கள் மாடுகளை வாகனத்தில் ஏற்றுவதாக எமக்குக் கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து மூன்று திருடர்களை பிடித்து அருகில் உள்ள மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.

அதன் பின்னர் சந்தேக நபர்களை பிரதேமக்கள் உடனடியாக பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். திருடர்கள் மூவரும் புல்மோட்டையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.