இங்கிலாந்தில் மூவரின் டி.என்.ஏவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட குழந்தைகள், பரம்பரை நோயின்றி பிறப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தமுறையில் இங்கிலாந்தில் 8 குழந்தைகள் பிறந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு தாய் மற்றும் தந்தையிடமிருந்து பெறப்பட்ட கருமுட்டை மற்றும் விந்தணுவை, தானம் பெற்ற பெண்ணின் இரண்டாவது கருமுட்டையுடன் இணைக்கும் முறையாக இது அமைகிறது.
அதேவேளை இந்த முறை ஒரு தசாப்த காலமாக இங்கிலாந்தில் சட்டபூர்வமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.