எதிர்நீச்சல் சீரியலில் வீட்டிற்கு வந்த பெண்கள் அறிவுக்கரசியை அடித்து துவைத்துள்ளனர்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த குணசேகரன் மீண்டும் தவறுக்கு மேல் தவறு செய்து வருகின்றார்.
பார்கவியின் தந்தையை கொலை செய்த வழக்கில் ஞானத்தை சிறைக்கு அனுப்பி வைத்த குணசேகரன், தற்போது எதிர்பாராத விதமாக பார்கவி அவரது வீட்டிற்கே வந்துள்ளார்.
பார்கவியுடன் வீட்டு பெண்களும் வந்த நிலையில், அறிவுக்கரசியிடம் தனது முதல் வேலையினை முடித்துள்ளனர்.
ஆம் இதுவரை கம்பீரமாகவும், சிங்கப்பெண்ணாகவும் இருந்த அறிவுக்கரசியை கதவை அடைத்துக் கொண்டு, வாயில் துணியை வைத்து வெளுத்து வாங்கியுள்ளனர்.
ஒரு கட்டத்தில் ஜனனி அறிவுக்கரசி மீது ஏறி அமர்ந்து வெளுத்ததுடன், காலால் மிதித்தும் தனது கோபத்தினை காட்டியுள்ளார்.
தனது ஆதிக்கத்தினை ஒட்டுமொத்த பெண்களிடம் காட்டிய அறிவுக்கரசியின் இந்த நிலை பார்வையாளர்களுக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







