அம்பாறை, பொத்துவில், உல்ல கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் அறுகம்பே பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) மாலை இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு , வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 11, 17, 34 மற்றும் 37 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் நால்வரும் உல்ல கடலில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கியுள்ளனர்.
இதன்போது அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த அறுகம்பே பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர், கடலில் மூழ்கிய நால்வரையும் காப்பாற்றி அவர்களுக்கு முதலுதவி அளித்துள்ளனர்.