கரதியான குப்பை மேட்டில் தீ விபத்து!

பிலியந்தலையில் உள்ள கரதியான குப்பை மேட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிசார் தெரிவித்தனர்.

மொரட்டுவ நகர சபையின் தீயணைப்பு பிரிவைச் சேர்ந்த நான்கு தண்ணீர் லொறிகள், இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 15 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அந்த இடத்தின் பொறுப்பதிகாரி துல்சிறி குமார தெரிவித்தார்.