கேரட் வளர்ப்பு என்பது எல்லோருக்கும் சவாலான ஒரு விடயம் தான். ஏனென்றால் மாடித் தோட்டத்தில் கேரட் வளர்ப்பது சற்று சிரமமாக இருக்கலாம் என பலர் நினைக்கிறார்கள்.
உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், வெங்காயம், தக்காளி போன்றவை வீட்டுத் தோட்டங்களில் வளர்த்தாலும், கேரட் வளர்ப்பு சிலருக்கு சவாலாகவே தோன்றுகிறது.
சிலர் விதைப்பதுடன் திருப்தி அடைந்து, குறைந்த வளர்ச்சியைக் கண்டதும் முயற்சியை நிறுத்திவிடுகிறார்கள்.
வீட்டின் மாடித் தோட்டத்திலும் கேரட்டை திரட்சியாகவும், 10 செ.மீ-க்கும் மேல் உயரமாகவும் வளர்த்துத் திறம்பட விளைச்சல் பெற முடியும். இதற்கு இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
கேரட் வளர்ப்பு
கேரட் என்பது பச்சையாகவே சாப்பிடக் கூடிய, சத்தான காய்கறியாகும். சுமார் மூன்று மாதங்களில் விளைச்சல் தரும் இதை, அதிகபட்சமாக 100வது நாளில் மண்ணிலிருந்து எடுத்து பயன்படுத்தலாம். மண் கலவை கேரட் நன்கு வளர சிறந்த மண் கலவை அவசியம்.
1 பங்கு செம்மண்
1 பங்கு ஆத்து மணல்
1 பங்கு கோகோ பீட்
1 பங்கு மண் புழு
உரம் விருப்பமிருந்தால் வேப்பம் புண்ணாக்கும் சேர்க்கலாம். விதைத் தேர்வு நர்சரிகளில் கிடைக்கும் Nantes வகை இயற்கையான ஆரஞ்சு நிற கேரட் விதையை தேர்ந்தெடுங்கள். தொட்டி அளவு குறைந்தது 15 இஞ்ச் ஆழம் கொண்ட தொட்டி அல்லது பெட்டியில் வளர்ப்பு சிறந்தது.
உரம் மற்றும் பராமரிப்பு
வாரத்திற்கு ஒரு முறை பஞ்சகவ்யம் அல்லது மீன் அமிலம் தெளிக்கலாம்.
முளைப்பின் போது களை செடிகள் தோன்றினால் அவற்றை வெட்டியோ, பிடுங்கியோ வேருடன் அகற்றவும். மூன்று வாரங்களுக்குள் செடி நல்ல உயரத்தில் வளரும்.
மக்கிய மாட்டுச் சாணம் சிறந்த இயற்கை உரமாக பயன்படுத்தலாம். வேர் அழுகல் நோய் தடுக்கும் விதமாக சூடோமோனாஸ் பயன்படுகிறது.
தொட்டி ஈரம் முற்றிலும் காய்ந்தபின் மட்டுமே தண்ணீர் ஊற்றவும்.
விதைத்த 75 நாட்களுக்கு பிறகு, மண்ணை மெதுவாக கிளறிப் பார்த்தால் கேரட்டின் வளர்ச்சியை கணிக்கலாம்.