நாட்டில் உள்ள மாஃபியாக்களை ஒழிக்கும் வகையில், இந்தியாவிலிருந்து கீரி சம்பா அரிசியை ஒத்த, ஜீ. ஆர் ரக அரிசியை இறக்குமதி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக, வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி ஒரு கிலோகிராம் 250 ரூபாய்க்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.