நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில் 04பேர் பலி!

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் உள்ள கர்மா என்ற பகுதியில் சுரங்கம் அமைத்து நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து 04பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

குறித்த நிலக்கரி சுரங்கத்தில் இன்று அதிகாலை(05) தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.

இதையடுத்து அங்கிருந்த தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதன்போது உயிரிழந்த நால்வரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களை மீட்கும் பணி இடம்பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்த நிலக்கரி சுரங்கமானது உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வந்ததாக கூறப்படுகிறது.