போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

40 வயதுடைய ரோஹன, மாப்பாகடவெவ, மஹியங்கனை பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மஹியங்கனை பூஜா நகர் பகுதியில் வைத்து சந்தேக நபரை சோதனைக்கு உட்படுத்திய போது சந்தேக நபரிடம் இருந்து 2510 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை இன்று (05) மஹியங்கனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.