அசைவ உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அசைவ உணவுடன் எவற்றை சாப்பிடக்கூடாது?
கடல் உணவுகள்
மீன், நண்டு கருவாடு போன்ற கடல் உணவுகளை சாப்பிடும் பொழுது பால், மோர், தயிர் போன்ற உணவுகளை தவிர்க்கவும். ஏனெனில் இவை செரிமானத்தை தாமதப்படுத்துகின்றது.
மேலும் மாமிச உணவு செரிமானமாவதற்கு அமில சுரப்பு தேவைப்படுகின்றது. ஆனால் பால் பொருட்கள் அமில சுரப்பினை நடுநிலையாக்குகின்றது. ஒவ்வாமையையும் ஏற்படுத்துகின்றது.
கீரைகள்
அசைவ உணவு சாப்பிடும் பொழுது கீரை வகைகளை சேர்த்துக் கொள்ளக்கூடாது. சில தருணங்களில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
சில கசப்பான கீரைகளை உணவில் சேர்ப்பதால், சில தருணங்களில் விஷமாகவும் மாறுகின்றது. ஆயுர்வேதத்தின் படி கீரைகள் மற்றும் அசைவ உணவுகள் வெவ்வேறு செரிமான நேரங்களை கொண்டிருப்பதால் அவை செரிமான மண்டலத்தை பலவீனப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
சிட்ரஸ் பழங்கள்
தர்பூசனி போன்ற அதிக நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களையும் தவிர்க்க வேண்டும்.
நீர்ச்சத்து மிகுந்த பழங்கள் செரிமான நொதிகளை நீர்த்துப்போக செய்து, இறைச்சியின் செரிமானத்தை தாமதப்படுத்தும். இதனால் வாயு, வீக்கம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
தேன்
அசைவ உணவினை சாப்பிட்ட பின்பு தேன் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். தேன் இயல்பாக சூடான தன்மையைக் கொண்டுள்ளது.
அசைவ உணவும் உடலுக்கு வெப்பத்தை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்ட நிலையில், இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது உடலில் அதிக உஷ்ணத்தை உருவாக்கி, செரிமான அமைப்பில் பாதிப்பினை ஏற்படுத்துமாம்.
அதிக காரமான உணவுகள்
இறைச்சி உணவுகளில் அதிக காரமான மசாலா பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். அசைவ உணவுகள் பொதுவாக கொழுப்புச்சத்து அதிகம் கொண்டதாக இருக்கும்.
அதிகப்படியான காரம் மற்றும் எண்ணெய் ஆகியவை ஒன்றாக சேரும் போது, செரிமான மண்டலத்தில் பிரச்சனை, அஜீரணக் கோளாறு, நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு இவற்றினை ஏற்படுத்தும்.
டீ, காபி
அசைவ உணவை சாப்பிட்ட பின்பு டீ மற்றும் காபி குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் இவற்றில் உள்ள டானின்கள் மற்றும் காஃபின்கள் இறைச்சியில் உள்ள இரும்புச்சத்து உறிஞ்சுதலை தடுக்கக்கூடும்.
ஏற்கனவே இறைச்சி செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் நிலையில், இவை இந்த செரிமான நேரத்தை மேலும் தாமதப்படுத்தி செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.