தலைமுடியை அசுர வேகத்தில் வளரவைக்க இந்த பழங்களை சாப்பிடுங்கள்

முடி உதிர்வு என்ற கொடிய ஆபத்து இன்று எல்லா வயதினருக்கும் உள்ள பொதுவான ஒரு பிரச்சனையாக அசுர வேகத்தில் உருவெடுத்துள்ளது.

ஆண், பெண் இருபாலாருக்கும் இந்தப் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

இதற்கு முறையற்ற உணவு பழக்கவழக்கங்கள் ஓர் முக்கிய காரணமாகும்.

அது தவிர உடல் உஷ்ணம், முடி வறட்சி, பொடுகு, புண்கள், வியர்வைத் திட்டுகள் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

அந்த வகையில், தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் பழங்கள் என்னென்ன, அதனை எப்படி சாப்பிடலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.

சிட்ரஸ் பழங்கள்

எலுமிச்சை, கிரேப் ப்ரூட், ஆரஞ்சு போன்ற பழங்களில் சிட்ரிக் அமிலம், வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை தலைமுடிக்கு ஊட்டம் கொடுத்து வேகமாக வளர வைக்கும்.

பெர்ரி

ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்ப்பெர்ரி போன்ற பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை தலைமுடியின் வேர் வரை சென்று நுண் குமிளிகள் ஆக்ஸிஜனேற்ற சேதம் ஏற்படுவதை தடுத்து, தலைமுடியை வேகமாக வளர வைக்கும்.
அவகோடா

அவகோடா

ஆரோக்கிய கொழுப்புகள், வைட்டமின் ஈ, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி தலைமுடி அடர்த்தியை அதிகப்படுத்தும். அத்துடன் உடலில் உள்ள உஷ்ணத்தையும் கட்டுக்குள் வைக்கிறது.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் ஏராளமான பொட்டாசியம், வைட்டமின்கள், இயற்கை எண்ணெய்கள் நிரம்பியுள்ளன. இவை தலைமுடியை வலுப்படுத்தி உதிர்வை கட்டுபடுத்துகிறது. அத்துடன் தலைமுடி அடர்த்தியாகவும் உதவிச் செய்கிறது.

பப்பாளி

பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ,சி,ஈ நிறைந்திருக்கும். இதிலுள்ள நொதிகள் தலைமுடி மறுவளர்ச்சிக்கு உதவிச் செய்கிறது.