குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறகடிக்க ஆசை மீனா

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. கடந்த 2019ம் ஆண்டு இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் தமிழில் துவங்கியது. தற்போது 6 சீசன்களாக வெற்றிகரமாக நடந்து வருகிறது.

சீசன் 6 கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கிய நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. புகழ், குரேஷி, ராமர், சௌந்தர்யா, சரத், சுனிதா உள்ளிட்டோர் இதில் கோமாளிலாக உள்ளனர். மேலும் ஷபானா, லட்சுமி ராமகிருஷ்ணன், பிரியராமன், ராஜு, உமைர் உள்ளிட்ட 10 பேர் இதில் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர்.

ஆனால், இரண்டு போட்டியாளர்கள் இதுவரை வெளியேறியுள்ள நிலையில், மீதம் 8 போட்டியாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சின்னத்திரையில் மாபெரும் வெற்றிகண்ட நிகழ்ச்சிகளை மற்ற மொழிகளிலும் நடத்துவது வழக்கம் தான். அந்த வகையில் குக் வித் கோமாளி ஏற்கனவே மலையாளத்தில் adopt செய்து எடுத்தனர். ஆனால், முதல் சீசனுக்கு பின் அடுத்தடுத்த சீசன்கள் மலையாளத்தில் வரவில்லை.

தெலுங்கில் குக் வித் கோமாளி
இந்த நிலையில், தற்போது தெலுங்கில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை கொண்டு வந்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு குக் வித் ஜாதி ரத்னலு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் ராதா மற்றும் நடிகர் ஆசிஷ் வித்யார்த் நடுவராக உள்ளனர்.

மேலும் இதில் பல பிரபலங்களும் போட்டியாளராக களமிறங்கியுள்ள நிலையில், சிறகடிக்க ஆசை சீரியல் கதாநாயகி கோமதி ப்ரியாவும் போட்டியாளராக எண்ட்ரி கொடுத்துள்ளார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ..