மின்சாரம் தாக்கியதில் சிறுமி பலி!

மதவாச்சி பொலிஸ் பிரிவின் சங்கிலிகந்தராவ பகுதியில் உள்ள வீட்டில் இருந்த 08 வயது சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி நேற்று (27) உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்சாரம் தாக்கிய குறித்த சிறுமி மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்சாரம் மூலம் தண்ணீரை சூடாக்கும் போது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், சிறுமியின் சடலம் மதவாச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.