எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன. இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.
ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்” என அழைக்கப்படுகின்றது.
அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.
எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டக்காரர்களாக இருப்பார்களாம். அப்படியானவர்கள் எந்தெந்த திகதிகளில் பிறந்திருக்கிறார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
எண் 2 எண் கணிதத்தின் படி, 2ஆம் எண்ணில் பிறந்தவர்கள் மூளையால் அல்ல மனதால் சிந்திக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த நபர்களுக்கு மனரீதியாக மற்றவர்களுக்கு பதில் கொடுக்கும் ஆற்றல் உள்ளது. தேவைகள் மற்றும் உணர்வுகளை வாயில் சொல்லாமல் புரிந்து கொண்டு செயற்படுவார்கள். மனிதநேயம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
எண் 9 9ம் எண்ணில் பிறந்தவர்கள் கருணையுடன் நடந்து கொள்வார்கள். ஆன்மீகத்துக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பார்கள். பிறருக்கு சேவை செய்வதில் முன்னிலையில் வகிப்பார்கள். இவர்களுக்கு மனிதாபிமானம் அதிகமாகவே இருக்கும். வழிக்காட்டுவதிலும் தங்களது வாழ்க்கையை அர்ப்பணிப்பார்கள். முக்கியமாக இவர்களுக்கு நடக்க போகக்கூடிய விஷயங்கள் முன்கூட்டியே தெரிந்துவிடும்.
எண் 7 எண் 7-ல் பிறந்தவர்கள் ஆன்மீக ரீதியில் ரொம்பவே வளர்ச்சி அடைந்து இருப்பார்கள். இவர்கள் வாழ்க்கையில் முக்கிய பாதைகளில் செல்வார்கள். கனவுகள் மூலம் எதிர்காலத்தை நடப்பவைகளை தெரிந்து கொள்வார்கள்.