முகத்திலுள்ள கருமை நீங்க

ஒவ்வொருவரும் முகம் வெள்ளையாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைக் கொள்வார்கள். அதே போன்று எவ்வித தழும்புகளும், கருமையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் விரும்புவோம்.

அதற்காக கடைகளில் விற்கப்படும் ஏராளமான அழகு பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அவற்றில் உள்ள கெமிக்கல்கள் முகத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

அப்படி பயன்படுத்தும் க்ரீம்களை விட வீட்டில் செய்யும் சில சரும பராமரிப்புக்கள் நிரந்தரமான அழகை தருகிறது.

சரும பராமரிப்பு எவ்வளவு அவசியமோ அதே அளவிற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை உட்க் கொள்வதும் அவசியம்.

அந்த வகையில், சருமத்திலுள்ள கருமையை எவ்வாறு இலகுவில் அகற்றலாம்? எப்படி நிரந்தரமாக வெள்ளையாக இருக்கலாம்? என்பதையும், இவற்றிற்கு உதவியாக இருக்கும் உருளைகிழங்கு Face pack-ஐ செய்யலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.

கரும்புள்ளிகள் நீக்க டிப்ஸ்

முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமாக இருந்தால் அவற்றிற்கு உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து முகத்தில் தடவலாம்.
தடவி 10 நிமிடம் ஊற வைத்து விட்டு, குளிர்ந்த நீரால் கழுவலாம்.
இப்படி தினமும் செய்து வந்தால், கரும்புள்ளிகள் மறையும்.

கருவளையம் பிரச்சினை
கருவளையம் பிரச்சினையுள்ளவர்கள் உருளைக்கிழங்கு வட்டம் வட்டமாக வெட்டி துண்டுகளாக்கி, ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து நன்கு குளிர வைத்து கண்களின் மேல் வைத்து 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
இப்படி தினமும் செய்து வந்தால், கருவளையங்கள் விரைவில் நீங்கும்.

முகத்திலுள்ள கருமை
சரும கருமை அதிகமாக இருப்பவர்கள் உருளைக்கிழங்கை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.
அத்துடன் 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் போன்று கலந்து கொள்ளவும்.
முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைக்கவும்.
அதன் பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை போட்டு வந்தால் சரும கருமை நீங்கும்.