ஈரானில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்க இந்தியாவின் உதவியை நாடும் இலங்கை!

ஈரானில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு இலங்கை இந்தியாவின் உதவியை நாடியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் இந்த வேண்டுகோளை ஏற்றுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு ஈரானில் உள்ள இலங்கை மாணவர்களை ஒப்பரேசன் சிந்து நடவடிக்கையின் கீழ் வெளியேற்றுவதற்கு இணங்கியுள்ளது. இந்தியா நேற்று 110 மாணவர்களை ஈரானின் வடபகுதியிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளது.