அறிவுரை வழங்குவதாக தெரிவித்து, பள்ளி மாணவர்களிடம் தன் அரசியல் செல்வாக்கை உயர்த்த, தவறான கருத்துகளை பரப்புவதாக, த.வெ.க., தலைவர் விஜய்க்கு, மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசியல் காரணங்களுக்காக, ‘நீட்’ தேர்வை எதிர்க்கும் அரசியல் கட்சிகளுடன் விஜய் சேர்ந்து, அரசியல் செய்வதை கண்டிக்கிறோம். மாணவர்களிடம் தன் திரைப்பட கவர்ச்சியால் உண்மைக்கு புறம்பான செய்திகளை தெரிவித்து, மாணவர்களை தவறாக திசை திருப்புவதையும், அவர்கள் இடையே அரசியல் செய்வதையும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.