படங்களில் செந்தில்-கவுண்டமணி கூட்டணி பிரிந்தது இதனால் தானா?வெளியான அதிர்ச்சி தகவல்!

கவுண்டமணி-செந்தில், இவர்களை பற்றி புதியதாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இப்போது உள்ள சின்ன குழந்தைகளுக்கு கூட தெரிந்த பிரபலங்கள். 80 கால கட்டங்களில் வெளியான தமிழ் படங்களில் கவுண்டமணி-செந்தில் கூட்டணி தான் காமெடியில் டாப்பில் இருந்தார்கள்.

கிட்டத்தட்ட 20 வருடங்கள் தமிழ் சினிமாவை ஆண்டனர். தொடர்ந்து ஒன்றாக இருவரும் காமெடி செய்து வெற்றிக்கண்டு வர ஒரு கட்டத்தில் பிரிந்துவிட்டனர். திடீரென அவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்ற காரணம் வெளிவராமலேயே இருந்தது.

தற்போது கவுண்டமணி-செந்திலின் வெற்றிக் கூட்டணி ஏன் பிரிந்தது என்ற தகவல் வந்துள்ளது.

100க்கும் மேற்பட்ட படங்களில் கவுண்டமணி-செந்தில் இணைந்து நடித்துள்ளனர், கரகாட்டக்காரன் படத்தில் வாழைப்பட காமெடி இன்றும் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது.

உங்களால் தான் படம் ஓடுகிறது, நீங்கள் இல்லை என்றால் கவுண்டமணி இல்லை” என்று செந்திலை சிலர் தவறாக வழி நடத்த இதனை கவுண்டமணியிடமே சொல்லி இருக்கிறார் செந்தில்.

இதனால் கவுண்டமணி இருவரும் தனித்தனியாக நடிப்போம் என கூறியுள்ளார். கவுண்டமணி 2வது ஹீரோவாக எல்லாம் படங்கள் நடிக்க தொடங்கி வெற்றிக்காண, தனியாக காமெடி படங்களில் நடித்த செந்தில் படங்கள் எதுவும் ஓடவில்லை.

ஒரு கட்டத்தில் உண்மையை புரிந்து கொண்ட செந்தில் கவுண்டமணியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அதன்பிறகு இருவரும் ஒன்றாக நடித்தாலும் அவர்களின் கூட்டணி சரியாக அமையாமல் போனது.