பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா புதிய ஹோட்டல் ஆரம்பிக்க உள்ள நிலையில், சுதாகருக்கு சரியான நெத்தியடி கொடுத்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை வளர்க்கும் கதையாக சென்றது.
எதுவும் அறியாத பெண்ணாக இருந்த பாக்கியா தற்போது ஹோட்டல் தொழிலில் கொடிகட்டி பறந்து வந்த நிலையில், இவருக்கு இடையூறாக சுகாதகர் களமிறங்கி ஹோட்டலை அபகரித்துள்ளார்.
ஆனால் இதில் பாக்கியா சோர்ந்து போகாமல் மீண்டும் புதிய ஹோட்டல் ஒன்றினை தொடங்குவதற்கு அட்வான்ஸ் கொடுத்துள்ளார்..
தற்போதும் சுதாகர் பாக்கியாவை சீண்டிய நிலையில், சரியான பதிலடி கொடுத்து அவரை வாயடைக்க வைத்துள்ளார்.