இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலையில் சிறிது சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தொள்ளாயிரத்து எழுபத்து நான்காயிரத்து முந்நூற்று தொண்ணூற்றெட்டு ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
அந்த வகையில் 24 கரட் தங்கம் 1 கிராமின் விலை முப்பத்து நான்காயிரத்து முந்நூற்று என்பது ரூபா என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 22 மற்றும் 21 கரட் தங்கத்தின் 1 கிராமின் விலை முறையே முப்பத்தோராயிரத்து ஐந்நூற்று இருபது ரூபாய் மற்றும் முப்பதாயிரத்து தொண்ணூறு ரூபாய் எனவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.