சமந்தாவிற்கு கோவில் கட்டிய ரசிகர்!

நடிகை சமந்தாவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. 15 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இருக்கும் அவர் தமிழ், தெலுங்கு மட்டுமின்றி தற்போது ஹிந்தியிலும் பிரபலமாகி இருக்கிறார்.

படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ்களில் அவர் நடித்து வருகிறார். அவர் மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட நிலையில், அவர் மீண்டும் தற்போது அதிக படங்கள் ஒப்புக்கொள்ள தொடங்கி இருக்கிறார்.

சமந்தாவுக்கு ஆந்திராவில் Bapatla என்னும் இடத்தில இருக்கும் Alapadu கிராமத்தில் ரசிகர் ஒருவர் கோவில் கட்டி இருக்கிறார்.

நேற்று சமந்தாவின் பிறந்தநாள் என்பதால் அந்த கோவிலை அவர் திறந்து இருக்கிறார்.