பூமியில் இருக்கும் நாடுகளில் எந்த நாட்டில் உள்ள மக்கள் மிகவும் சோகமானவர்கள் என்பதை இந்த பதிவில் பார்கலாம்.
ஆப்கானிஸ்தான்
சோகமான நாடுகளில் இது 147 வது இடத்தில் உள்ளது. இவர்களது வாழ்க்கை தரம் குறைந்த மதிப்பீட்டில் காணப்படுகின்றது.
தாலிபான்களின் ஆட்சியின் கீழ் இது போர் மற்றும் சமூக அடக்குமுறையால் மோசமடைந்துள்ளது. இங்குள்ள மக்கள் தங்கள் விருப்பபடி வாழ உரிமை தடுக்கப்படுகிறது.
சியரா லியோன்
சியரா லியோன், உலகின் இரண்டாவது சோகமான நாடாகும், இது மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் 146-வது இடத்தில் உள்ளது. இதற்கு காரணம் நாட்டில் நிலவும் அரசியல் நிலையற்றத்தன்மை மற்றும் வறுமை தான்.
லெபனான் லெபனான் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 145 வது இடத்திலும், சோகமான நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. காரணம் பெரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அமைதியின்மையாகும்.
லெசோதோ
சோகமான நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. காரணம் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள், மற்றும் அதிக அளவிலான எச்.ஐ.வி. காரணமாகும்.
ஜிம்பாப்வே
மகிழ்ச்சியற்ற நாடுகளின் பட்டியலில் ஐந்தாவது பட்டியலில் உள்ளது. நாட்டின் பொருளாதார பிரச்சினை பணவீக்கம் மற்றும் அரசாங்கப் பிரச்சினைகள் தான் இதற்கு காரணம்.
காங்கோ
மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் காங்கோ ஜனநாயகக் குடியரசு 142வது இடத்தில் உள்ளது. பல ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டு போரும் மற்றும் மோசமான வறுமையும் தான்.
மலாவி மலாவி சோகமான நாடுகளின் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் கடுமையான குறைபாடு மற்றும் ஏழ்மையான நாடாகும்.
இந்தியா
உலக மகிழ்ச்சி அறிக்கையின்படி, 147 நாடுகளில் இந்தியா 118வது இடத்தில் உள்ளது, கடந்த ஆண்டு இந்தியா 126-வது இடத்தில் இருந்தது. காரணம் மதவாத மோதல்கள், பொருளாதார சிக்கல்கள் மற்றும் கல்வி, சுகாதாரம் போன்றவையாகும்.