ஜோதிடத்தில் 9 கிரகங்கள், 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒருவரின் வாழ்க்கையில் தாக்கம் செலுத்துகின்றன.
12 ராசிகளும் ஒவ்வொரு கிரகங்களால் ஆளப்படும் என்பதால் ஆளுக்கு ஆள் குணாதிசயங்களும் வேறுப்பட்டவையாக இருக்கும்.
ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசிக்கும் அதன் சொந்த இயல்பு உள்ளது. அப்படியாயின், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் பலவீனமானவர்களாக இருப்பார்கள். எந்தவொரு விடயத்தை செய்யும் போதும் பல தடவைகள் யோசிப்பார்கள்.
ஆனால் அதில் சில ராசிக்காரர்கள் மிகவும் தைரியமானவர்களாக இருப்பார்கள். எந்தவொரு பயமும் இல்லாமல் வேலைகளை செய்வார்கள்.
அந்த வகையில், எந்தவொரு விடயத்தையும் பயம் இல்லாமல் துணிந்து செய்யும் ராசிகளில் பிறந்தவர்கள் யார் யார் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
ஜோதிடத்தின் படி, மேஷ ராசியில் பிறந்தவர்கள் பிறவியில் இருந்தே தைரியசாலிகளாக இருப்பார்கள். எந்தவொரு விடயத்தையும் தைரியமாக செய்வார்கள். அச்சம் கொள்ளமாட்டார்கள். மாறாக இவர்களின் தைரியம் அவர்களின் சுய மரியாதையை அதிகப்படுத்தும். தவறான விஷங்களை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். யாராவது தங்களின் சுயமரியாதையைப் புண்படுத்த முயன்றால், அதை எளிதில் விட்டுவிடவும் மாட்டார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் எந்தவொரு முடிவையும் பயம் கொண்டு எடுக்கமாட்டார்கள். தங்களால் முடிந்தவரை கடின உழைப்பால் முன்னேற நினைப்பார்கள். நேர்மையுடன் நடந்து கொள்வதால் எந்தவிதமான அச்சமும் இருக்காது. அடிக்கடி கோபம் கொள்ளும் இவர்கள் சில சமயங்களில் அமைதியாக இருப்பார்கள். நேர்மையானவர்கள், ஒழுக்கமானவர்கள், மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுவார்கள் இது போன்று பல நல்ல பழக்கங்கள் இவர்களிடம் இருக்கும். மற்றவர்களுக்கு நல்லது செய்ய இவர்களை போல் யாரும் இருக்கமாட்டார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் சிங்கத்தை போன்று தைரியமானவர்களாக இருப்பார்கள். இவர்களை பெரும்பாலும் போலீஸ், மருத்துவம், ராணுவம் உள்ளிட்ட துறைகளில் பார்க்கலாம். தன்னுடைய இலக்கை நோக்கிய பயணம் தெளிவானதாக இருக்கும். தலைவணங்கி வேலைச் செய்ய விருப்பம் கொள்ளமாட்டார்க்ள. சுயமரியாதை விடயங்களில் அதிகமாக கோபம் கொள்வார்கள். அவர்களை யாராவது தீண்டினால் பாதிப்பு தான்.