2029ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ச வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மூதூர் தொகுதி அமைப்பாளர் இப்ராஹிம் சதாத் தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் இன்று(01.04.2025) இடம்பெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
“கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் பொதுஜன பெரமுன பெற்ற வாக்குகள் மூன்று இலட்சத்து 50,000 ஆகும்.
அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச அணி பெற்ற வாக்கு சுமார் 50 இலட்சம் ஆகும். ஆனால், அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களால் சுமார் 19 இலட்சம் வாக்குகளைத்தான் பெற முடிந்தது.
எனவே, வாக்கு வங்கியில் ஸ்திரமான நிலையில் பொதுஜன பெரமுன திகழ்கின்றது. இந்தநிலையில், அடுத்த ஜனாதிபதியாக வரக்கூடிய சக்தி எமக்கே இருக்கின்றது.
பொதுஜன பெரமுன என்ற அரசியல் கட்சியே, இலங்கையின் அரசியல் வரலாற்றில், அபிவிருத்திப் புரட்சியை ஏற்படுத்திய ஒரே ஒரு அரசியல் கட்சியாகும்” எனக் கூறியுள்ளார்.