வீடொன்றில் மீட்க்கப்பட்ட ஆணின் சடலம்!

நிகவெரட்டிய – தனிகிதவ பிரதேசத்தில் வீடொன்றுக்குள் அருகில் சந்தேகமான முறையில் உயிரிழந்த ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நிகவெரட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

தனிகிதவ பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் தற்போது நிகவெரட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது கொலையா அல்லது சாதாரண மரணமா என்பது தொடர்பில் இதுவரை தெரியவராத நிலையில், நிகவெரட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.