ஆண்கள் கையில் காப்பு அணிவதற்கு பின்னால் இத்தனை விடயம் இருக்கா!

உலோகங்களில் ஆண்கள் பலர் அணிந்து கொள்கிறார்கள்.

இத்தகைய காப்புகளை அணிவதால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலவிதமான நன்மைகள் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக தங்கம், வெள்ளி, செம்பு ஆகிய உலோகங்களால் ஆன காப்பினை அணிந்து கொள்வதால் அளவில்லாத நன்மைகள் நமக்கு கிடைப்பதாக சொல்லப்படுகிறது.

அதன்படி, ஜோதிட ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக சில உலோகங்களுக்கு நேர்மறை ஆற்றல்களையும், பிரபஞ்ச சக்திகளையும் ஈர்க்கும் தன்மை உண்டு. இவற்றை முறையாக பயன்படுத்தும் போது அளவில்லாத பலன்களை நம்மால் பெற முடியும்.

பெண்கள் கையில் வளையல் அணிவது பாரம்பரிய வழக்கம், மங்கலத்தின் அடையாளமாக சொல்லப்படுகிறது. பெண்கள் கையில் வளையல் அணியாமல் இருக்கக் கூடாது.

வளையல் அணியாமல் விளக்கேற்றக் கூடாது. வளையல் அணியும் பெண்களிடம் மகாலட்சுமி குடியிருப்பதாக சொல்லப்படுகிறது.

பெண்களைப் போல் ஆண்கள் சிலரும் கையில் வளையல் போன்று அணிந்திருப்பதை காணலாம். இதனை காப்பு என்று சொல்லுவதுண்டு. தங்கம், வெள்ளி, செம்பு என பலவிதமான உலோகங்களில் ஆண்கள் அணிவது உண்டு.

ஆண்கள் அணியும் காப்பு வெறும் அழகிற்காக அணிவது கிடையாது. இதற்கு பின்னால் ஆன்மிக மற்றும் ஜோதிட காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

சில குறிப்பிட்ட உலோகங்களால் செய்யப்பட்ட காப்புகளை அணியும் போது அது வாழ்வில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.

பொதுவாக வெள்ளியால் செய்யப்பட்ட ஆபரணங்களை அணியும் போது காயம், நோய் ஆகியவற்றில் இருந்து விரைவில் குணம் பெற உதவும்.

உடலில் நோய் எதிர்ப்பு நுண்கிருமிகள் உற்பத்தியை தூண்டுகிறது, ஐந்து உள்ளுறுப்புகள் பாதிப்பில் இருந்து காக்கிறது. நோய் கிருமிகளை அழிப்பதுடன், நேர்மறை ஆற்றல்களை அதிகரித்து, ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. மனித உடலில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுக்களை உள்ளிழுத்துக் கொள்கிறது.

​வெள்ளி காப்பு
வெள்ளியில் காப்பு அணிவதால் மனஅழுத்தம் குறைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இது ஆன்டிபாக்டீரியல் காரணியாக செயல்பட்டு, பல ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு தருகிறது.

உடலில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள், கெட்ட விஷயங்கள் ஆகியவற்றை வெள்ளி ஈர்த்துக் கொள்கிறது. பல மடங்காக நன்மைகளை ஈர்க்கும் தன்மை கொண்டதாகும்.

இதனால் உடலையும், மனதையும் பாதுகாக்கிறது. வெள்ளி சுக்கிரனுக்குரிய உலோகம் என்பதால் இதற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை உண்டு. அதே போல் சந்திர பலத்தையும் அதிகரிக்கக் கூடியதாகும்.

​தங்க காப்பு
தங்கத்தில் காப்பு அணிவதால், சகஸ்ர சக்கரத்தின் ஆற்றல் தூண்டப்படுகிறது. தங்கத்திற்கு எப்போதும் பாதுகாக்கும் தன்மை உண்டு.

அதனால் கெட்ட விஷயங்களை உங்களை நெருங்க விடாது. வலது கையில் தங்கத்தால் ஆன காப்பினை அணியும் போது சுகமான மனநிலையயும், வாழ்க்கையயும் ஈர்க்கும் தன்மை கொண்டது.

தனித்துவமான ஆற்றல்கள் எதையும் தூண்டா விட்டாலும் கெட்ட சக்திகளை நெருங்க விடாது. ஜோதிட ரீதியாக பல நன்மைகளை தருவதாகவும் சொல்லப்படுகிறது.

சரியான முறையில் தங்கத்தால் செய்யப்பட்ட காப்பினை அணிவதால் அளவில்லாத செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரும் என சொல்லப்படுகிறது. உடலில் வசீகரத்தையும், கம்பீர தோற்றத்தையும் தரும் என சொல்லப்படுகிறது.

செம்பு காப்பு
செம்பினால் செய்யப்பட்ட காப்பினை ஆண்கள் வலது கையில் அணியம் போது அது உடலில் ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது.

நோய்களை எதிர்த்து போராடும் திறனை அதிகரிக்க செய்கிறது. எலும்புகள் அதன் சக்தியை இழப்பதை செம்பு தடுக்கிறது.

இதனால் மூட்டுவலி, வீக்கம் ஆகியவை கட்டுகிறது. செம்பு சூரியனின் அம்சம் கொண்டது என்பதால் இதனை அணிபவர்களுக்கு உடல் மற்றும் மன ஆற்றல் அதிகரிக்கிறது.

மன அழுத்தம் குறைந்து அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்க செய்வதாக சொல்லப்படுகிறது.