சுவிட்சர்லாந்தை கருப்புப் பட்டியலில் சேர்த்த அமெரிக்கா

அமெரிக்கா சுவிட்சர்லாந்தை கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாக சுவிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கருப்புப் பட்டியலில் சுவிட்சர்லாந்து
நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதாகக் கூறி சுவிட்சர்லாந்தை அமெரிக்கா கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாக சுவிஸ் பொருளாதார விவகாரங்களுக்கான மாகாணச் செயலக இயக்குநரான Helene Budliger Artieda தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து, ’positive balance of trade’ என்னும் நிலையிலிருப்பதாலேயே அமெரிக்கா சுவிட்சர்லாந்தை கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாக Helene தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டில் இறக்குமதியை விட அது ஏற்றுமதி செய்யும் பொருட்களின் அளவு அதிகமாக இருந்தால், அது ’positive balance of trade’ என அழைக்கப்படும்.

அதாவது, அந்த நாடு இறக்குமதிக்காக செய்யும் செலவைவிட, ஏற்றுமதி மூலம் அதிக வருவாய் பார்க்கிறது என்று அர்த்தம்.

ஆகவேதான் அமெரிக்கா சுவிட்சர்லாந்தை கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாக Helene தெரிவித்துள்ளார். ஆனால், நியாயமற்ற வர்த்தகம் செய்வதாக சுவிட்சர்லாந்தை குற்றம் சாட்டமுடியாது என்கிறார் அவர்.

சுவிட்சர்லாந்து, தொழில்துறை வரிகளை ஒழித்துவிட்டது, மருந்தகத்துறை வரிகள் இல்லை, அமெரிக்க நிறுவனங்கள் வரி செலுத்தாமலே தங்கள் தயாரிப்புகளை சுவிட்சர்லாந்துக்கு ஏற்றுமதி செய்யலாம்.

ஆக, ட்ரம்ப் எதை விரும்புகிறாரோ, அதைத்தான் நாங்கள் நீண்ட காலமாக செய்துவருகிறோம் என்றும் கூறியுள்ளார் Helene.