கைதான யாழ் YouTuber கிருஷ்ணா தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளை நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூப்பர் உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்களிடம் நிதி பெற்று உதவி

யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் வறியவர்களுக்கு உதவி செய்வதாக புலம்பெயர் தமிழர்களிடம் நிதியினை பெற்று ,அதன் ஊடாக உதவி செய்வது போன்றன காணொளிகளை தனது யூடியூப் தளத்தில் பதிவேற்றி வந்துள்ளார்.

பெண்ணொருவரை அவமானப்படுத்துவது போன்று பேசி காணொளியொன்று வெளிவந்த நிலையில், அது சர்ச்சையாக மாறி இருந்தது. அத்தோடு, இந்த விடயமானது, நாடாளுமன்ற அமர்வில் கூட பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது.

இந்த நிலையில், சர்ச்சையான காணொளியில் உள்ள குடும்பத்தின் வீட்டிற்கு யூரியூபர் வந்திருந்த வேளை, ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த நிலையில், சர்ச்சையான காணொளியில் உள்ள குடும்பத்தின் வீட்டிற்கு யூரியூபர் வந்திருந்த வேளை, ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.