யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூளாய் பகுதியில் நேற்று (7) இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேவேளை வாள்வெட்டை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.