சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு பெண்கள் இன்று (04) காலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகள்
கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகையின் மதிப்பு தோராயமாக 3 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் என்பதுடன் மற்றைய பெண் நாரம்மல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவராவார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த சிகரெட்டுகளைக் கொண்டுவருவதற்காகவே இருவரும் சுற்றுலா விசாக்களின் கீழ் துபாய்க்குச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.