இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் கைது!

பத்தேகம, எத்கந்துர பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதான மூவரும் படபொல மற்றும் எத்கந்துர பிரதேசங்ளைச் சேர்ந்த 21,33 மற்றும் 41 வயதுடையவர் என கண்டறியப்பட்டுள்ளது

கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி இரவு எத்கந்துர பிரதேசத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு நபர்கள் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டள்ளனர்.

பத்தேகம பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.