ரோகினியை தேடி கடைக்கே வந்த மாமா மாட்டிக் கொள்ளுவாரா ரோகினி

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினியின் மாமாவாக நடித்துவரும் நபர் நேரடியாக கடைக்கு வந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகும். முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.

இருவரும் கஷ்டப்பட்டு முன்னேற துடிக்கும் கதைகளமாகவும், கொடுமைக்கு மத்தியில் மாமியாருக்கு சிறந்த மருமகளாகவும் கதை செல்கின்றது.

முத்து மீனாவின் வளர்ச்சி பிடிக்காமல் மாமியார் பல சதிவேலைகளை செய்து வருகின்றார். அவருடன் மனோஜ் மற்றும் ரோகினியும் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் ரோகினியின் மாமாவாக நடிக்கும் நபர் திடீரென மனோஜின் ஷோரூமிற்கு வந்துள்ளார். அவரைப் பார்த்ததும் ரோகினி ஆடிப்போயுள்ளார்.

ரோகினி ஏற்கனவே திருமணமானவர் என்பதை குடும்பத்தில் மறைத்து பல நாடகங்களை அரங்கேற்றி வருகின்றார். இந்த உண்மைகள் எப்பொழுது வெளிச்சத்திற்கு வரும் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.