வீதியைக் கடக்கச் சென்ற பாடசாலை மாணவர்கள் மீது மோதிய லொறி மாணவர்கள் காயம்

வீதியைக் கடக்கச் சென்ற இரண்டு பாடசாலை மாணவர்கள் மீது லொறியொன்று மோதியயதி மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் வெல்லவாய, தனமல்வில பிரதான வீதியில் வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரி மற்றும் சகோதரர் ஆவர், காயமடைந்த இருவரும் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக லொறியின் சாரதி வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.