இரவில் யாரெல்லாம் சாதம் சாப்பிடக் கூடாது?

இரவு நேரத்தில் யாரெல்லாம் சாதம் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சாதம்
.இன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் சாதம் சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர் அவர்கள் மட்டுமின்றி நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் சாதத்தை தவிர்த்து வருகின்றனர்.

அரிசியில் எனர்ஜியைக் கொடுக்கும் கார்போஹைட்ரேட் இருக்கின்றது. ஆனால் சாதத்தில் கார்போஹைட்ரேட் மட்டுமின்சி சில சத்துக்களும் உள்ளது.

இவ்வளவு சத்துக்கள் அடங்கியிருந்தாலும் இரவு நேரத்தில் சாதம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமாம். அந்த வகையில் இரவில் சாதம் சாப்பிடக்கூடாது என்பதை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

இரவில் யார் சாதம் சாப்பிடக்கூடாது?

நீரிழிவு நோயாளிகள் இரவில் சாதம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதற்கு பதிலாக சிவப்பு அரிசி என்று கூறப்படும் மட்டை அரிசியை எடுத்துக் கொள்ளலாம். வெள்ளை அரிசி ரத்தத்தில் சர்க்கரை அளவை மேலும் அதிகரித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றது.

இதே போன்று எடையைக் குறைக்க நினைப்பவர்கள் அரிசி உணவினை எடுத்துக் கொள்ளக்கூடாது. இதற்கு பதிலாக புரதம், நார்ச்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளவும். இவை உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கும்.

நாள் முழுவதும் அமர்ந்து கொண்டு வேலை செய்பவர்கள், எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்து கொண்டும், படுத்துக் கொண்டும் இருப்பவர்கள் இரவில் அரிசி சாதத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது. இரவில் அரிசி சாப்பிடுவது பயன்படுத்தப்படாத சக்தியை கொழுப்பாக சேமிக்கிறது. அதுவே சுறுசுறுப்பான நபர்கள் அரிசி சாதத்தை எடுத்துக் கொண்டால், விரைவில் ஜீரணிக்க முடியுமாம்.

சாதம் எப்போது சாப்பிடலாம்?

சாதம் சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் மதியம் அல்லது அதற்கு முன்பு சாப்பிடலாம். ஏனெனில் அன்றாட வேலைகளை செய்வதற்கு உடலுக்கு அதிக சக்தி தேவை என்பதால், சாதத்தில் உள்ள கார்போஹைட்ரேட் உதவுகின்றது.
இந்த நேரத்தில் உங்கள் வளர்சிதை மாற்றம் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதால், கலோரிகளை எரிப்பது எளிதாகிறது. உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் சாதத்தை எடுத்துக் கொள்வது சிறந்த தேர்வாக இருக்கின்றது.