கனடாவின் கடுமையான பனிப்புயல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு மற்றும் நாளை காலை வேளையில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சுமார் 25 சென்டிமீட்டர் அளவில் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எதிர்வு கூறல்களை வெளியிட்டுள்ளது.
மணித்தியாலத்திற்கு இரண்டு முதல் நான்கு சென்டிமீட்டர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்த பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்திற்கு இடையூறுகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.