உங்கள் முகம் பளிச்சென்று வெண்மையாக வேண்டுமா? முயன்று பாருங்கள்!

இன்றைய காலத்தில் இருக்கும் இளம் வயதினர் வீட்டை விட்டு வெளியே செல்வதாக இருந்தால் மேக்கப் போட்டுக் கொண்டு செல்லும் நிலைக்கு ஆளாகி விட்டார்கள். இப்படி மேக்கப் போடுவதன் மூலம் விரைவில் அவர்களுடைய முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். இந்த மேக்கப் போடுவதற்கு முக்கியமான காரணம் அவர்களின் தற்போதைய நிறம் சற்று வெளுத்துப் போய் நல்ல வெள்ளை நிறமாக தெரிய வேண்டும் என்பது மட்டுமே. மேலும் இந்த மேக்கபை உபயோகப்படுத்துவதன் மூலம் அவர்களுடைய முகம் மட்டுமே வெள்ளையாக தெரியும். உடல் பாகங்களான கைகள் கால்கள் எல்லாம் கருமை நிறத்திலே தென்படும். இவற்றை முற்றிலும் தவிர்த்து உடல் முழுவதும் சீராக நிறமாக மாறுவதற்கு உதவக்கூடிய ஒரு பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

கருப்பாக இருக்கக் கூடியவர்கள் கூட தங்களுக்கு ஏதாவது ஒரு விசேஷம் என்றால் உடனே பியூட்டி பார்லர் சென்று ப்ளீச்சிங் செய்வது மேக்கப் போடுவது அது இது என்று என்னென்னமோ செய்கிறார்கள். திருமண நாள் அன்று மட்டும் பார்க்க அப்படி இருப்பார்கள். அன்று மாலையே முகத்தை கழுவிய பிறகு பழைய நிறம் திரும்ப வந்துவிடும். இப்படி அனைவருக்குமே நடக்கும். இதை தவிர்த்து எப்பொழுதும் ஒரே மாதிரி நல்ல நிறமாக மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு மாதம் தொடர்ச்சியாக இந்த பேக்கை பயன்படுத்தினாலே போதும். நல்ல நிறத்துடன் அழகாக தென்படுவார்கள். மேக்கப் போட வேண்டும் என்ற அவசியமே இருக்காது.

இதற்கு நமக்கு ஒரு கைப்பிடி அளவு வெள்ளை உளுந்து வேண்டும். இதோடு ஐந்து பாதாமை சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு கைப்பிடி அளவு மஞ்சள் பூசணிக்காயை போட வேண்டும். இதில் இருக்கக்கூடிய தோல் விதைகள் எதையும் நீக்காமல் கழுவி அப்படியே போட்டு விடுங்கள். அடுத்ததாக இதனுடன் ஆரஞ்சு பழ தோல் ஒரு கைப்பிடி அளவு போட்டு சிறிது பன்னீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். இது டேஸ்ட் பதத்திற்கு இருக்க வேண்டும். தேவைப்பட்டால் மேற்கொண்டு பன்னீர் ஊற்றிக் கொள்ளலாம்.

பன்னீர் இல்லாத பட்சத்தில் தண்ணீரை சேர்த்துக் கொள்ளுங்கள். நைசாக அரைத்த இந்த விழுது தான் நாம் போடப்போகும் பேக். இதை தினமும் குளிப்பதற்கு முன்பாக முகம் கை, கால்கள் என்று எந்த இடத்தில் உங்களுக்கு கருமை அதிகமாக இருக்கிறதோ அங்கெல்லாம் தேய்த்து அரை மணி நேரம் விட்டுவிட்டு பிறகு குளித்து விடுங்கள். இப்படி தினமும் செய்து வருவதன் மூலம் உடலில் இருக்கக்கூடிய கருமை நீங்கி நல்ல நிறத்தை பெற முடியும். ஒரு முறை தயார் செய்து வைத்த இந்த பேக்கை ஃப்ரிட்ஜில் வைத்துக்கொண்டு தினமும் சற்று குளிர்ச்சி போன பிறகு உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.