துல்கர் சல்மானுடன் ஜோடி சேரும் பூஜா ஹெக்டே

மலையாள நடிகர் துல்கர் சல்மான் மலையாள சினிமாவை கடந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அறிமுக இயக்குனர் ரவி இயக்கத்தில் துல்கர் சல்மான் அடுத்து மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். இதனை ஸ்ரீ லஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். இதில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கின்றார். முதன்முறையாக இவர்கள் இணைந்து நடிக்கின்றனர். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நாக சவுரியா நடிப்பதாகவும், இவர் வில்லன் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் உருவாகும் இப்படம் வித்தியாசமான காதல் கதையில் உருவாகிறதாம்.