கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் லனக் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
மேலும் இந்த விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஒன்றாரியோ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பெண் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் இரண்டு பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.